Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவின் வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தாணு.. வைரலாகும் கொல மாஸ் கெட்டப்!
இன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் சூர்யா பெயரை கொண்டு அதகளம் செய்து வருகின்றன.
அதேபோல் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் அடுத்ததாக வெளியாக இருக்கும் சூரரைப்போற்று படத்திலிருந்து காட்டு பயலே என தொடங்கும் பாடலின் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதேபோல் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல்.
கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா கொஞ்சம் வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் கிளம்பின. அதுமட்டுமில்லாமல் இரட்டை கதாபாத்திரங்கள் எனவும் எதிர்பார்ப்பை எகிற வைத்தன.
இந்நிலையில் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு வாடிவாசல் படத்தின் கேரக்டர் போஸ்டர் எனப்படும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

vaadivasal-suriya
இந்த சர்ப்ரைஸ் லிஸ்டிலேயே இல்லையே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முரட்டு ஆளாக இருக்கும் சூர்யாவின் அந்த போஸ்டர் இணையதளங்களில் வைரல் ஆகி விட்டது.

v-creations-thaanu-wishes
