Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூரரைப்போற்று டிவி உரிமம் இத்தனை கோடியா? மிரண்டுபோன கோலிவுட் வட்டாரம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் சூரரைப்போற்று படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் நெட்வொர்க் வாங்கியுள்ளது.
இறுதிசுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா சூர்யாவுக்கு தரமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் இந்த படத்தின் வெய்யோன்சில்லி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுக்கு அடுத்தடுத்து படங்கள் ஓடவில்லை என்பதால் இந்த படம் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு சன்டிவி சூரரைப்போற்று படத்தை சுமார் 18 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரரைப்போற்று படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு இருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம்.
