Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூரரைப்போற்று அமேசான் தளத்தில் நேரடி வெளியீடு.. ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சூர்யா
சூர்யாவின் படங்கள் சமீபகாலமாக திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பை பெறாதது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அவரது ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூர்யா அடுத்ததாக பெரிதும் நம்பி காத்துக்கொண்டிருந்த திரைப்படம் சூரரைப்போற்று. சூர்யாவுக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் சூரரைப்போற்று படம் மிகவும் எதிர்பார்க்க தக்க ஒரு படமாக அமைந்தது.
அதற்கு தகுந்தார்போல் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களாகவே சூரரைப்போற்று படம் அமேசான் தளத்தில் வெளியாகி அதிக வாய்ப்பு இருக்கிறது என பேச்சுக்கள் எழுந்து வந்தன.
இருந்தாலும் சூர்யாவின் வட்டாரங்களிலிருந்து இது பொய்யான தகவல் என்பதைப் போலவே பரப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது சூரரைப்போற்று படம் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாக இருப்பதை சூர்யாவே நேரடியாக அறிவித்துவிட்டார்.
சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களுக்காக சூரரைப்போற்று படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

sooraraipottru-cinemapettai
இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ரசிகர்கள் தொடர்ந்து சூர்யாவிடம் படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அவ்வளவு தான்.. எல்லாம் கைமீறிப் போயிருச்சு என ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கிறார் சூர்யா.
