fbpx
Connect with us

Cinemapettai

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் வியாபாரம் எவ்வளவு தெரியுமா? மிரண்டுபோன தமிழ் சினிமா.. சின்ன கல்லு பெத்த லாபம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் வியாபாரம் எவ்வளவு தெரியுமா? மிரண்டுபோன தமிழ் சினிமா.. சின்ன கல்லு பெத்த லாபம்!

சூர்யா மற்றும் அபர்ணாமுரளி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று(Soorarai Pottru). சமீபத்தில்தான் சூரரைப்போற்று படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றது. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மே மாதம் ரிலீசாக வேண்டிய இந்த திரைப்படம் தற்போது ஊரடங்கு உத்தரவால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனேகமாக ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு வெளியாகலாம் எனவும் அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தற்போது தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில் உள்ளதால் சூரரைப்போற்று படத்தை OTT தளங்களில் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் சூரரைப்போற்று படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கங்களில் அறிவித்துள்ளனர்.

தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக அனைவரும் தியேட்டரில் படத்தை வெளியிடுவது சிரமமான ஒன்று என யோசித்துக் கொண்டிருக்கையில் பெரிய அளவு வியாபாரம் ஆகியுள்ளது சூரரைப்போற்று படம்.

வெறும் 19 கோடி பட்ஜெட்டில் உருவான சூரரைப்போற்று படம் சுமார் 100 கோடி வியாபாரம் நடைபெற்றுள்ளதாம். இதனை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும் வியாபாரத்தில் நானும் சளைத்தவள் அல்ல என நிரூபித்து இருக்கிறது சூரரைப்போற்று.

Continue Reading
To Top