fbpx
Connect with us

Cinemapettai

செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸில் சாதனை படைத்த சூரரை போற்று.. ட்விட்டரை புரட்டி எடுத்த சூர்யா ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸில் சாதனை படைத்த சூரரை போற்று.. ட்விட்டரை புரட்டி எடுத்த சூர்யா ரசிகர்கள்

தமிழ்சினிமாவில் இருதுருவ நடிகர்களுக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் சூர்யா. நடிப்பைத் தாண்டி கல்வி சேவையில் பெரும் பங்காற்றி வருகிறார். இதனாலேயே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் என்னவோ தெரியவில்லை சமீபகாலமாக சூர்யா என்ற நடிகருக்கு ஏற்ற அளவு படங்கள் வரவில்லை. நடிக்கும் படங்களில் எல்லாம் சூர்யாவின் தனித்துவம் விலகி சென்றதாக ஒரு மாயை உருவாகியது.

சமீபகாலமாக சூர்யாவின் நடிப்பில் வெளிவரும் படங்கள் அவரது ரசிகர்களை தாண்டி பொது மக்களை கவரவில்லை என்பதே உண்மை. ஆனால் 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிக்கப்போகும் படங்கள் அனைத்துமே திறமையான இயக்குனர்களை உள்ளடக்கியது.

அதற்கு பிள்ளையார் சுழி போட்டது போல் புத்தாண்டு தினத்திற்கு சூரரைப்போற்று திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. வெறித்தனமாக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு விருந்து படைத்தது போல் இருந்தது அந்த போஸ்டர்.

இதனால் இப்போதே அந்த படம் மிகப்பெரிய ஹிட் என்பதை குறித்து வைத்துக் கொள்ளலாம். மேலும் டுவிட்டரில் ஒரே நாளில் ஒரே படம் சம்பந்தப்பட்ட பல டேக்குகள் சுமார் 2.6 மில்லியன் ட்வீட்டுகள் செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

sooraraipotru-tweet-suriya

இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top