Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர்களுடன் இசை வெளியீட்டு விழா.. எதிர்பார்க்காத இடத்தில் சூர்யா கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்
சூர்யா என்ற நடிகர் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இறுதியாக வெளிவந்த காப்பான் படம் வெற்றி என்றாலும் சூர்யாவின் தகுதிக்கேற்ற வெற்றி இல்லை என்பதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
இதற்கு எல்லாம் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்பதற்காக சூர்யா இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான மாறா தீம் பாடல் சமூக வலைதளங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெய்யோன் சில்லி என்ற சிங்கிள் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து விரைவில் சூரரைப்போற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. சூரரைப் போற்று படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை யாரும் எதிர்பாராத வகையில் சென்னை ஏர்போர்ட்டில் சூரரைப்போற்று படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சூர்யா நடத்த உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சூரரைப்போற்று படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சூர்யா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது புதியதாகவும் அதே சமயம் வைரலாகவும் பேசப்பட்டு வருகிறது.
வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்.
