fbpx
Connect with us

Cinemapettai

இரண்டு வருடம் தள்ளிப்போகும் சூரரைப்போற்று ரிலீஸ்.. விரட்டி விரட்டி சூர்யாவை வெளுத்து வாங்கும் பலர்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டு வருடம் தள்ளிப்போகும் சூரரைப்போற்று ரிலீஸ்.. விரட்டி விரட்டி சூர்யாவை வெளுத்து வாங்கும் பலர்!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று படம் அமேசான் தளத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் செய்தி அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதற்காக பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சூரரைப்போற்று படத்தை பார்த்த பல பிரபலங்களும் படத்தைப் பற்றி பெரிய அளவில் பேசிய நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தை எதிர்த்து நீட் தேர்வு பற்றி அதிரடியான கருத்து ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டியுள்ளார் சூர்யா.

அதில் கல்வி பற்றி மிக தெளிவாக குறிப்பிட்டதால் சூர்யாவின் மீது செம கடுப்பில் இருக்கின்றனர் அரசியல்வாதிகள். அதன் வெளிப்பாடு தற்போது அப்பட்டமாகத் தெரிந்து வருகிறது.

சூரரைப்போற்று படத்திலிருந்து மண்ணுருண்ட எனும் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட பல மாதங்கள் ஆன நிலையில் நீட் சர்ச்சைக்கு பிறகு தான் அந்த பாடலின் மீது தொடுக்கப்பட்ட கேஸ் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு வரை சூரரைப்போற்று படத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்த நிலையில் விரைவில் அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

சூர்யாவுக்கு தொடர்ந்து சோதனைக்கு மேல் சோதனை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறாராம் சூர்யா.

அமேசான் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் குறித்த தேதியில் படத்தை வெளியிட என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

Continue Reading
To Top