Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவை அடக்க ஒரே வழி இதுதான்.. சிக்கலில் சிக்கும் சூரரை போற்று.. வேலையை காட்டும் அரசியல்வாதிகள்!
தமிழ்நாட்டை பொறுத்தவரை நல்லது செய்தால் கேடு தான் மிச்சம் என்பது சூர்யா வாழ்க்கையில் விரைவில் நடைபெற்றுவிடும் போல. கல்வி விஷயத்தில் அவருக்கு தெரிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
மாணவர்களின் கஷ்டங்களை எடுத்துரைக்கும் விதமாக நீட் தேர்வுக்கு எதிராக ஒரு அறிக்கை விட்டார். அதில் மத்திய மாநில அரசுகளை சரமாரியாக வெளுத்து வாங்கியிருக்கிறார்.
இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மற்ற ரசிகர்கள் கூட ரசிகர் சண்டையை மறந்து விட்டு சூர்யாவுக்கு சப்போர்ட் செய்து வருவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
இது சில அரசியல்வாதிகளை கடுப்பேத்தியிருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். தளபதி விஜய் அரசியல் கருத்துக்களை பேசும் போது எந்த மாதிரி அவருக்கு இடைஞ்சல் கொடுத்தார்களோ அதையே தற்போது சூர்யாவுக்கும் கொடுக்க முடிவு செய்துவிட்டார்களாம்.
விஜய்யின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் படம் வெளிவராமல் இருக்க பல்வேறு விதமான சதிகளை செய்வதைப் போல தற்போது OTTயில் வெளியாக இருக்கும் சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கும் சர்ச்சைகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்களாம்.
பெரும்பாலும் அக்டோபர் 30-ஆம் தேதி அந்த படத்தை வெளியிட முடியாத அளவுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து விடுவார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆனால் கார்ப்பரேட் நிறுவனத்திடம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது எனவும் சிலர் கூறி வருகின்றனர். இருந்தாலும் சூரரைப்போற்று படம் வெளிவருவதற்குள் சில சிக்கல்களை சந்திக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
