Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொம்பளையா அவ, என்ன படம் சார் அது.. சூரரைப்போற்று பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தயாரிப்பாளர்!
பல தியேட்டர் ஓனர்கள் தற்போது சூர்யாவின் மீது கடுப்பில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதற்கு காரணம் சூர்யா தன்னுடைய சூரரைப்போற்று படத்தை அமேசான் தளத்தில் ரிலீஸ் செய்வதுதான்.
ஆனால் தன்னுடைய அடுத்த படங்களை எல்லாம் தியேட்டரில் தான் வெளியிடுவேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சூர்யா. இருந்தாலும் ஒரு சிலர் சூர்யாவின் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவது தான் கவலையாக உள்ளது.
இந்நிலையில் சூரரைப்போற்று படம் சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவைச் சேர்ந்த சிலருக்கு போட்டு காட்டப்பட்டுள்ளது.
படத்தை பார்த்து அனைவரும் ஆகா ஓகோவென பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதிலும் தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர் ஒருவர் சூரரைப்போற்று படத்தை பார்த்துவிட்டு பிரமித்து விட்டார்.
ஒரு பெண் இயக்குனருக்குள் இவ்வளவு திறமை இருக்கிறதா என்பதை மெய் மறந்து ரசித்த அந்த தயாரிப்பாளர், படம் பார்த்த உடன் அம்மா கிரியேஷன்ஸ் சிவா உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், பொம்பளையா சார் அவ, கடந்த 20 வருஷத்துல இந்த மாதிரி ஒரு படத்தை பார்த்ததே கிடையாது என சிலாகித்து போய் விட்டாராம். இந்த படம் மட்டும் சாதாரண சூழ்நிலையில் தியேட்டரில் வெளியாகி இருந்தால் 200 கோடி வசூல் எல்லாம் அசால்டாக செய்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது சூழ்நிலை சரியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுக்கு இந்த படம் நீண்ட கால வெற்றி தாகத்தை தணிக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனை சிவா சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று படம் அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
