fbpx
Connect with us

Cinemapettai

சூர்யாவின் சூரரைப்போற்று டீசர் இணையத்தில் லீக்.. அதிர்ச்சியில் படக்குழு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் சூரரைப்போற்று டீசர் இணையத்தில் லீக்.. அதிர்ச்சியில் படக்குழு

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு 2டி லேப் ஒன்றில் சூர்யாவின் சூரரைப்போற்று டீசர் உருவாக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அதன் எடிட் செய்யப்படும் பணிகள் முடிவடைந்து காட்சிகளை திரையிட்டு பார்த்துள்ளனர்.

அந்த காட்சிகள் திடீரென இணைய தளங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா மற்றும் படக்குழுவினர், உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

தற்போது விசாரணையின் படி, அந்த லேப்பில் திரையிடப்பட்ட போது அங்கிருந்த ஊழியர்களில் ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து சக நண்பர்களுக்கு ஷேர் செய்துள்ளார். அது காட்டுத்தீ போல் பரவி ஆரம்பித்துவிட்டது. தற்போது அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு சூர்யா தான் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top