fbpx
Connect with us

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர் தான்.. கேப்பில் கிடா வெட்டிய பிரபல நடிகை

suriya-aruvaa-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர் தான்.. கேப்பில் கிடா வெட்டிய பிரபல நடிகை

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க இருக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

அருவா படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே சூர்யா ரசிகர்களிடையே பெரிய எனர்ஜி வந்ததை போல நாளுக்குநாள் அதனைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டே வருகிறார்கள்.

சூர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே வெகுவாகப் பரவியது. மேலும் பிரபல தெலுங்கு நடிகைகள் ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரில் யாரோ ஒருவர் தான் நடிக்க உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியது.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ராசி கண்ணா(Raashi Khanna) நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அவரே அறிவித்து விட்டார்.

படக்குழுவினர் கூட இன்னும் கூறாத நிலையில் ராஷிகண்ணா தனது ரசிகர்களிடம் டுவிட்டரில் உரையாடிக் கொண்டிருக்கும் போது இந்த செய்தியை உளறி விட்டார். இது தெரிந்து படக்குழுவினர் சற்று அப்செட்டில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

aruvaa-movie-update-tweet

aruvaa-movie-update-tweet

raashi-khanna

raashi-khanna

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top