Tamil Cinema News | சினிமா செய்திகள்
அருவா படத்திற்காக கொடுவா மீசையுடன் வலம் வரும் சூர்யா.. வைரலாகும் புகைப்படம்
சூர்யா எனும் அற்புதமான நடிகன் சமீபகாலமாக தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறார். கடந்த வருடத்தில் இவரது நடிப்பில் வெளியான என் ஜி கே மற்றும் காப்பான் ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரிய அளவில் சோபிக்கவில்லை.
கடந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களை அனைத்து திரையரங்குகளும் வெளியிட்டது. அதில் சூர்யாவின் இரண்டு படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை என்பதே சோகமான விஷயம்.
இதை எப்படியாவது மாற்றியாக வேண்டும் என சூரரைப்போற்று படத்தில் நடித்தார் சூர்யா. 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக இருந்த சூரரைப்போற்று படம் கிராபிக்ஸ் பணிகளின் காரணமாக சம்மர் வெளியீட்டிற்கு தள்ளிப்போனது.
தற்போது மேலும் சோதனையாக கொரானா வைரஸ் தாக்கத்தினால் தற்போது அனைத்து படங்களும் குறித்த தேதியில் இருந்து தள்ளி செல்கின்றன. இந்நிலையில் மே 1ம் தேதி வெளியாக இருந்த சூரரைப்போற்று திரைப்படம் ரம்ஜான் வெளியீடாக வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான படங்களில் நடிப்பதை ஓரம் கட்டி வைத்துவிட்டு மாஸ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சூர்யா, ஹரியுடன் சேர்ந்து அருவா படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும் இருக்காது. காரணம் ஹரி விரைவில் படப்பிடிப்பை முடித்து விடுவார் என்ற நம்பிக்கை தான்.
அருவா படத்திற்காக சூர்யா தனது மீசையை வித்தியாசமாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல்தான் சூர்யா ஹரி கூட்டணியில் உருவான சிங்கம் படத்தில் வித்தியாசமான மீசையுடன் வலம் வந்தார். அருவா படத் தலைப்பில் பிரச்சனை இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

suriya-aruva
