Connect with us
Cinemapettai

Cinemapettai

அதிரடியாய் மிரட்டும் அருவா.. எத்தனை வேடத்தில் சூர்யா நடிக்கிறார் தெரியுமா?

suriya-dual

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிரடியாய் மிரட்டும் அருவா.. எத்தனை வேடத்தில் சூர்யா நடிக்கிறார் தெரியுமா?

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு தற்போது சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கப்போகிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களை கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

தற்போது அதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து அருவா படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் அருவா படத்தின் கதை எந்த மாதிரி இருக்கும் என ஒரு பேட்டியில் ஹரி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, காக்கி சட்டை எல்லாம் ஓரம் வைத்து விட்டு வேல், கோவில் படங்களை போல கிராமத்து அம்சங்கள் மற்றும் குடும்பங்கள் நிறைந்த ஒரு கதையை இயக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியிருந்தார். தற்போது அதே மாதிரிதான் அருவா படத்திலும் அமைந்துள்ளது.

வேல் படத்தைப்போல் அருவா படத்திலும் சூர்யா அண்ணன், தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார். இதில் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் அண்ணன் மற்றும் தம்பி இருவரில் ஒருவர் நாயகனாகவும் மற்றொருவர் வில்லனாகவும் நடிக்க உள்ளனர்.

தற்போதைய கமர்சியல் படங்களுக்கு பக்கா இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக வெளிவரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காக்கி சட்டையை ஓரம் வைத்தது ஹரியை பொருத்தவரை நல்லது தான் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top