fbpx
Connect with us

சிங்கத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கலாம்.. சூர்யாவின் அடுத்த பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகம்

suriya-movie-part2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிங்கத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கலாம்.. சூர்யாவின் அடுத்த பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகம்

தமிழ் சினிமாவில் தற்போது தத்தளித்து வரும் சூர்யாவின் சூரரைப்போற்று படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இன்றளவும் ஒரு சில படங்கள் ஓடாவிட்டாலும் ரசிகர்கள் அவரை கொண்டாடி தான் வருகின்றனர்.

2016ஆம் ஆண்டு வெளிவந்த 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் விக்ரம் குமார், தெலுங்கு படமான ‘மனம்’ சூர்யாவுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அதனை ரீமேக் செய்யலாம் என்று கூறினாராம்.

அதற்கு விக்ரம் குமார் என்னிடம் இன்னொரு கதை உள்ளது என்று 24 படத்தின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையை கூறியுள்ளார். சூர்யாவுக்கு இந்த கதையும் மிகவும் பிடித்துப்போக படத்தை உடனடியாக எடுக்கலாம் என்றுகூறிவிடாராம். அதற்கு பின்னர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் திட்டமிடப்பட்டு தொடங்கியதாம் 24 படம்.

இந்த படத்தில் சூர்யாவின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. அதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்று கூறியுள்ளார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் அடிப்படையில் படங்கள் எடுப்பது அவ்வளவு எளிதல்ல ஏனென்றால் அதிகமான கற்பனை நிறைந்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாகவும் அதனை சூர்யாவிடம் நிறைய பேசி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன் விரைவில் இந்த படத்தினைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறியுள்ளார்.

சூர்யாவை பொறுத்தவரை அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார், அதனால் தான் என்னவோ ரசிகர்கள் இன்றளவும் அவரை கொண்டாடி வருகின்றனர். சில தினங்களில் ஹரி மற்றும் சூர்யாவின் கூட்டணியில் அருவா படம் தொடங்க இருக்கிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளார். எது எப்படியோ விக்ரம் குமாருக்கு மிகப்பெரிய வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது, ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த படம் வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
To Top