செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 18, 2025

சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தை விட 2 கோடி அதிக பட்ஜெட்டில் உருவான நந்தா படம்.. உண்மையை சொன்ன தாணு!

நடிகர் சூர்யாவின் படத்தை விட அறிமுக நடிகர் நந்தாவின் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததாக அந்த படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு சமீபத்திய முன்னணி பத்திரிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூர்யாவின் உயரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனி ஒரு நாயகனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் செம வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

அப்பேர்ப்பட்ட சூர்யாவின் படத்தைவிட தற்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சின்ன இடம் கூட கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நடிகர் நந்தாவின் படத்தின் பட்ஜெட் அதிகம் என்றால் அனைவருக்கும் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.

அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சூர்யா ஜோதிகா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான காக்க காக்க படத்தை தயாரித்தவர் கலைப்புலி எஸ் தாணு. இந்த படத்தை கவுதம் மேனன் வெறும் இரண்டரை கோடியில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து கொடுத்தாராம்.

ஆனால் தாணு தன்னுடைய நெருங்கிய சொந்தக்காரர் ஒருவரின் மகனான நந்தாவை சினிமாவில் பெரிய ஆளாக்கி விட வேண்டும் என்பதற்காக அவர் நடித்த புன்னகை பூவே என்ற படத்திற்காக கிட்டத்தட்ட ஐந்து கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்தாராம்.

punnagai-poove-cinemapettai
punnagai-poove-cinemapettai

யுவன் சங்கர் ராஜா இசை, வடிவேலு காமெடி என அனைத்து விஷயங்கள் இருந்தும் படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் படத்தின் இயக்குனர் கதையில் ஏற்கனவே இருந்த கிளைமாக்ஸ் காட்சியை எடுக்காமல் வித்தியாசமாக எடுக்கிறேன் என தாணுவை குழியில் தள்ளி விட்டது தான் என தாணுவே குறிப்பிட்டுள்ளார்.

Trending News