Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தீவிர சிகிச்சை பிரிவில் சூர்யாவின் முரட்டுத்தனமான இயக்குனர்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்

சூர்யாவுக்கு தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஒருவர் சமீபத்திய படப்பிடிப்பின் போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா சினிமா கரியரில் பெரிய உயரத்திற்கு வந்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது ஹரியின் படங்கள். மாஸ் ஹீரோவாக சூர்யா மாற பெரிதும் உதவியாக இருந்தது அவரின் படங்கள் தான். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

suriya-hari-cinemapettai

suriya-hari-cinemapettai

அதன் பிறகு சூர்யா மற்றும் ஹரி இருவரும் இணைந்து அருவா என்ற படத்தில் பணியாற்ற இருந்த நிலையில் ஹரியின் கதை சூர்யாவை பெரிய அளவு இம்ப்ரெஸ் செய்யாததால் அந்த படத்தில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய மச்சான் அருண் விஜய்யுடன் இணைந்து தற்போது புதிய படம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பழனியில் முதல்கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்த அடுத்த சில நாட்களிலேயே ஹரிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளாராம்.

அதற்கு காரணம் பழனியில் அடித்த புழுதிக் காற்று தான் என்கிறார்கள் அருண் விஜய் பட வட்டாரங்கள். மேலும் ஹரி படக்குழுவினர் ஒருவருக்கு கொரானா தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஹரிக்கு உருமாறிய கொரானா வந்துவிட்டதா எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இருந்தாலும் தற்போது வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஹரி எந்த நிலைமையில் உள்ளார் என்பதை தற்போது வரை படக்குழுவினரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதே பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

Continue Reading
To Top