fbpx
Connect with us

Cinemapettai

அஞ்சான் பட தோல்வியால் சம்பளத்தில் இத்தனை கோடியை விட்டுக் கொடுத்த சூர்யா.. அடக் கொடுமையே!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஞ்சான் பட தோல்வியால் சம்பளத்தில் இத்தனை கோடியை விட்டுக் கொடுத்த சூர்யா.. அடக் கொடுமையே!

தமிழ் சினிமாவின் இரு துருவ நடிகர்களான விஜய், அஜித் ஆகியோரின் சினிமா மார்க்கெட்டை ஒரு காலத்தில் ஆட்டி பார்த்தவர் தான் சூர்யா. சூர்யாவின் தொடர் வெற்றிகளால் மொத்த சினிமாவும் ஆச்சரியமாக பார்த்தது.

ஏழாம் அறிவு படம் வெளியாகும் போதெல்லாம் ரஜினியின் பட அளவுக்கு கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியதை மறக்க முடியாது. ஆனால் தன்னுடைய கேரியரில் சூர்யா தவறான படத்தை தேர்ந்தெடுத்தது அஞ்சான் தான்.

என்னதான் மாஸ் படமாக இருந்தாலும் கதையில் சொதப்பியதால் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படம் சூர்யாவின் மார்க்கெட்டையும், இயக்குனர் லிங்குசாமியின் மார்க்கெட்டையும் ஒரேடியாக சாய்த்து விட்டது.

அப்போது விழுந்த சூர்யா தான் தற்போது வரை ஒரு வெற்றி கூட கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இருந்தாலும் சூரரைப்போற்று படத்தை பெரிதும் நம்பி காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சூர்யா, அஞ்சான் படத்தின் தோல்வியால் தனது சம்பளத்தில் மூன்று கோடியை லிங்குசாமிக்கு விட்டுக் கொடுத்து விட்டாராம். இதனை சித்ரா லட்சுமணன் நடத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு மீண்டும் லிங்குசாமியுடன் ஒரு படத்தில் இணைய இருந்ததாகவும், சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த வாய்ப்பு தற்போது வரை நடக்காமல் தாமதித்து வருவதாகவும் வருத்தப்பட்டுள்ளார் லிங்குசாமி.

Continue Reading
To Top