Connect with us
Cinemapettai

Cinemapettai

சூர்யாவுக்கு இடது கை முறிந்தது? லீவுல சும்மா இருக்க சொன்னா கேட்க மாட்டீங்களே.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு இடது கை முறிந்தது? லீவுல சும்மா இருக்க சொன்னா கேட்க மாட்டீங்களே.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூர்யா என்ற பெயரைக் கேட்டாலே கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர். அஜித் விஜய்க்கு பிறகு அதிக அளவு ரசிகர் பட்டாளங்களை கொண்ட ஒரே நடிகர் என்று கூட குறிப்பிட்டு சொல்லலாம்.

அயன், சிங்கம் 2 போன்ற படங்களுக்கு பிறகு பெரிய அளவு வெற்றி கிடைக்காமல் தடுமாறி வருகிறார் சூர்யா. எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் செம கடுப்பில் இருக்கிறார் போல.

எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விறுவிறுப்பாக ஹரி இயக்கும் படத்திற்கு ரெடியாகி கொண்டிருந்த சூர்யாவுக்கு மேலும் ஒரு சோகமாக கொரானா பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு செல்ல முடியவில்லை. இதனால் வீட்டில் இருந்தபடியே உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம்மில் வொர்க் அவுட் செய்துள்ளார்.

எதிர்பாராத விதமாக கை தவறிக் கீழே விழுந்து அவரது இடது கை முறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரிய அளவு அடி இல்லை எனவும், உடனடியாக ஹாஸ்பிடல் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இருந்தாலும் பெரிய அடி இல்லை என்று கூறியதால் அவர்களுக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டுள்ளது. சூரரை போற்று படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகும் அருவா படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top