செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ராஜமௌலியுடன் இணைகிறாரா சூர்யா.? கங்குவா மேடையை அதிரவிட்ட சம்பவம்

Suriya: தீபாவளி ரேசில் அமரன் முன்னிலை வகிக்கும் நிலையில் அடுத்ததாக கங்குவா படத்தை ஒட்டுமொத்த திரையுலகமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறது. தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் ப்ரமோஷன் தற்போது ஜோராக நடந்து வருகிறது.

நவம்பர் 14 அன்று ரிலீஸ் ஆக இருக்கும் இப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் முதல் தமிழ் படம் என இப்போது கணிப்புகள் சொல்கின்றன. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுடன் பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தின் தெலுங்கு பிரமோஷன் சமீபத்தில் நடைபெற்றது.

அதில் பான் இந்தியா இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் சூர்யா என் பட வாய்ப்பை மிஸ் செய்து விட்டதாக கூறினார்.

ஆனால் நான்தான் அவருடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன். மேலும் அவர்தான் எனக்கு பாகுபலி படத்திற்கான இன்ஸ்பிரேஷன் என கூறினார். இதைக் கேட்டதும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போன சூர்யா எழுந்து மேடைக்கு சென்று அவரை கட்டி அணைத்துக்கொண்டார்.

ராஜமௌலியுடன் இணையும் சூர்யா

முன்னதாக சூர்யா ராஜமவுலி பட வாய்ப்பை மிஸ் செய்தது பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த ட்ரெயினை நான் மிஸ் செய்து விட்டேன். ஆனாலும் அதே ஸ்டேஷனில் தான் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

இப்படியாக இவர்களின் பேச்சு கங்குவா மேடையை அதிர வைத்தது. ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் மூலம் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.

அதாவது விரைவில் சூர்யா ராஜமவுலி கூட்டணி இணையும் என்பதுதான். தற்போது கசிந்துள்ள தகவலின் படி ஏற்கனவே இவர்கள் அது குறித்து பேசி விட்டதாகவும் அதனாலயே ராஜமவுலி கங்குவா ப்ரமோஷனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாகவும் கூறுகின்றனர்.

ஆக மொத்தம் சூர்யா விஜய் இடத்தை பிடிக்கப் போகிறார் என்ற பேச்சு தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுக்க இருக்கும் அவர் கங்குவா மூலம் புது ரெக்கார்ட் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News