Tamil Nadu | தமிழ் நாடு
சூர்யாவின் முகத்திரையை கிழிக்க சர்ச்சைக்குரிய போட்டோவை லீக் செய்த காயத்ரி! வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!
தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் சென்ற வாரத்தில் ஒரே நாளில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வை ஒழிப்பதற்காக ஒரே சமூகமாக ஒன்றிணைவோம் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், தனது ஆதங்கத்தையும் அந்தப் பதிவில் வெளிப்படுத்தியிருந்தார்.
சூர்யாவின் இந்த பதிவை, பாஜகவின் தொண்டராக உள்ள டான்ஸ் மாஸ்டரான காயத்ரி ரகுராம் கடுமையாக சாடியிருந்தார்.
சினிமா விளம்பரத்திற்காக வைக்கும் பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதால் சினிமாவை தடை செய்வதா? என்ற கேள்வியையும் முன்வைத்து சூர்யாவின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி ‘நீட் தேர்வு சவால்களும்..பயிற்றுமொழி சிக்கல்களும்..’ என்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீட் தேர்விற்கான புத்தகம் ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
அப்போது அந்த விழாவில் எடுக்கப்பட்ட போட்டோவை தற்போது காயத்ரி ரகுரம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஒருபக்கம் புத்தகத்தை வெளியிடுவது மறுபக்கம் தேர்வை ரத்து செய்யுங்கள்! என ரெட்டை வேஷம் போடுகிறார் சூர்யா என்று அந்த போட்டோவிற்கு கருத்து தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

gayathri-suriya
நீங்களும்தான் குடிச்சிட்டு தகராறு பன்னுனதா நீயூஸ் வந்துச்சி,. இப்போதும் அதே மாதிரியா டெய்லி செஞ்சிகிட்டு இருக்கீங்க, செஞ்சத தப்புன்னு உணர்றவன் மனுசன் என்று சூர்யா ரசிகர்கள் காயத்ரி ரகுராமை வெளுத்து வாங்குகின்றனர்.
