துருவ நட்சத்திரம் படத்தால் பிரிந்த சூர்யா-கவுதம் மேனனை இணைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில் இதில் கலைப்புலி எஸ்.தாணு தீவிரமாக இறங்கியுள்ளாராம். அவர் தயாரித்த ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தற்போது முடிவு செய்துள்ளதாகவும் இருவரிடமும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி சம்மதம் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அச்சம் என்பது மடமையடா’, எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களோடு அடுத்து ஜெயம் ரவி படத்தையும் இயக்கவுள்ள கவுதம் மேனன், தற்போது ‘காக்க காக்க 2’ படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுத தொடங்கிவிட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

‘காக்க காக்க’ முதல் பாகத்தில் நடித்தவர்களில் ஜோதிகா தவிர மீதி அனைவரும் இந்த இரண்டாம் பாகத்தில் உண்டாம். மேலும் இந்த படம் உண்மையிலேயே ‘காக்க காக்க’ படத்தின் தொடர்ச்சியான படம் என்றும் கூறப்படுகிறது.