Tamil Cinema News | சினிமா செய்திகள்
12 வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த கௌதம் மேனன் மற்றும் சூர்யா பட ஷூட்டிங் ஓவர்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணி என்ற சென்டிமென்ட் நிறைய உண்டு. ஒரு சில இயக்குனர் மற்றும் நடிகர்கள் தொடர்ந்து சில படங்களில் பணியாற்றுவார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கூட்டணியாக வலம் வந்தவர்கள் கௌதம் மேனன் மற்றும் சூர்யா.
இவர்கள் இருவரது கூட்டணியில் வெளிவந்த காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
பிறகு துருவ நட்சத்திரம் என்ற படத்தில் பணியாற்ற இருந்த நிலையில் கவுதம் மேனன் கதையில் சொதப்பியதால் சூர்யா திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார்.
அதன்பிறகு இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஒன்று சேர்ந்து பணியாற்றாமல் இருந்தனர்.
ஆனால் தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக நவரசா என்ற பெயரில் இயக்குனர் மணி ரத்னம் தயாரிக்கும் படத்தில் கௌதம் மேனன் இயக்கும் குறும்படம் ஒன்றில் வெறும் ஒரே வாரத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
சூரரை போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நவரசா படத்தில் நடித்துள்ள சூர்யா மற்றும் கவுதம் மேனன் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

navarasa-suriya-gautham-menon
