வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

விஜய்யை பின்பற்றும் சூர்யா.. இதுவரை செய்யாத புதிய முயற்சி

சிங்கம் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

எதற்கும் துணிந்தவன் படத்தில் பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ் வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது .

தற்போதுள்ள நடிகர்களின் படங்கள் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகிறது. அதேபோல் தமிழ், தெலுங்கு மொழிகளில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக உள்ளது. இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

பல முன்னணி நடிகர்களின் தமிழில் வெளியாகும் போது அதே சமயத்தில் தெலுங்கில் வெளியாகிறது. ஆனால் தெலுங்கு டப்பிங்கை மற்ற டப்பிங் ஆர்டிஸ்ட் ஐ வைத்து தான் பேச வைப்பார்கள். ஆனால் விஜய் தன்னுடைய குரலில்தான் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடுவார்.

விஜய் நடிக்க உள்ள 66 வது படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கையும் விஜய் தான் பேச உள்ளார். தற்போது விஜய் போல சூர்யாவும் எதற்கும் துணிந்தவன் படத்தின் தெலுங்கு டப்பிங்கை அவரே பேச உள்ளார்.

சூர்யாவுக்கு தெலுங்கில் அதிகமாக மார்க்கெட் உள்ள நிலையில் அவருடைய சொந்த குரலிலே டப்பிங் செய்து எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக உள்ளதால் ரசிகர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News