Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாரிசு நடிகருக்கே இந்த நிலைமையா!
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருப்பவர் சூர்யா.
என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய தனித் திறமையால் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
இந்நிலையில் சூர்யாவின் சூரரை போற்று படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட 30 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்பேர்ப்பட்ட சூர்யா தன்னுடைய முதல் சம்பளமாக ரூ. 786 ரூபாய் வாங்கிக் கொண்டு இருந்தாராம்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே உறவினர் ஒருவரின் டெக்ஸ்டைல் தொழிலில் 18 மணி நேரம் வேலை பார்த்து ஒரு நாளைக்கு ரூ. 786 ரூபாய் வாங்கி கொண்டிருந்தாராம்.
என்னதான் சூர்யா சிவகுமாரின் மகனாக இருந்தாலும் தானும் ஒரு சராசரி மனிதன்தான் என்பதை அந்த வேலை அவருக்கு உணர்த்தியதாக பல மேடைகளில் தெரிவித்துள்ளார்.

suriya-sudha-kongara-2
