surya-sivakumar
surya-sivakumar

சூர்யா தனது சினிமா வாழ்க்கையில் நிறைய மக்களுக்காக உதவி செய்து வருகிறார். இவருக்கு தென்னிந்தியாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது குடும்பத்தின் சார்பாக 50 லட்ச ரூபாய் வழங்கி உள்ளார். இது மட்டுமல்லாமல் அவர் இயக்கிவரும் டிரஸ்ட் மூலம் பல உதவிகளை செய்து உள்ளார்.

suriya-fans
suriya-fans

இது ஒருபுறமிருக்க சூர்யாவின் ரசிகர்கள் ஒரு படி மேல் சென்று தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். தலைவனைப் போல் தான் தொண்டன் என்பதை நிரூபிக்கும் விதமாக அவர்கள் மதுரையை சேர்ந்த அபிநயா என்ற குழந்தைக்கு இருதய ஆபரேசனுக்காக 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ரசிகர்களுக்கு செய்த உதவி சக ரசிகர்களுக்கு இன்னும் ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. இது போன்ற ரசிகர்கள் பட்டாளம்  கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்தான். ரசிகர்கள் நன்கொடையாக வழங்கிய போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்.! பீலா பீலா கலக்கலான பாடல்.