Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakumar

Tamil Nadu | தமிழ் நாடு

பேச்சா பேசுறிங்க.. சிவக்குமார் மீது வழக்குப்பதிவு.. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது

சூரியக்குடும்பத்தில் இன்னும் சர்ச்சையில் சிக்காதவர் கார்த்திக் மட்டும் தான் போல, ஏனென்றால் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று வீடியோவில் சிவகுமார் தெரிவித்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சிவக்குமார் பேசிய வீடியோவை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்திற்கு தமிழ் மாயன் என்பவர் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். திருப்பதியின் சொத்துக்களை விற்பனை செய்யும் விவகாரத்தில் எதிராக பேசியுள்ளதாக சிவக்குமார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவருடன் சேர்ந்து 12 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல்நிலையத்தில் நடிகர் சிவகுமார் மீது புகார் அளிக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து ஜோதிகா பேசிய வீடியோ பல எதிர்ப்புகளை கிளப்பியது. இதற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சூர்யா.

அதற்குப் பின்னர் ‘பொன்மகள் வந்தாள்’ OTT-யில் வெளி வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இப்படி அடுக்கடுக்காக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் சூர்யாவின் குடும்பத்தினர், இந்த பிரச்சினையை எப்படி சுமுகமாக கையாளப் போகிறார்கள் என்று ரசிகர்கள் புழம்பி வருகின்றனர்.

சொல்லப் போனால் எந்த ஒரு பிரச்சினையும் வேண்டாம் என்று கார்த்திக் மட்டும் ஒதுங்கியுள்ளது ரசிகர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இப்படி சமூகத்தில் நடக்கும் ஒரு சில பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்தால் அது நம்மளை திரும்ப அடிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

Continue Reading
To Top