Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-vijaysethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவை முந்தும் விஜய் சேதுபதி.. வெற்றி யாருக்கு என கொலவெறியில் காத்திருக்கும் ரசிகர்கள்

முன்பெல்லாம் இரண்டு ஹீரோக்களின் திரைப்படத்தை ஒரே நாளில் திரையரங்கில் வெளியிட்டால், யாரோட படம் நல்லா இருக்குனு ரசிகர்களிடையே ஒரு பெரும் போட்டியே நிலவி வரும்.

கால் கடுக்க நின்னு ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோவிற்காகவே டிக்கெட்டை அடிச்சு புடிச்சு வாங்கி, கூச்சல் கும்மாளத்தோடு படத்த பாக்குறதுல ரசிகர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம் இருக்கும்.

ஆனா இப்ப இந்த கொரோனாவால் படப்பிடிப்பை முடித்து திரையிட தயாராக இருந்த திரைப்படங்கள் அனைத்தும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கிறது.

எத்தனை நாள் இப்ப திறப்பாங்க, அப்ப திறப்பாங்கன்னு, திரையரங்கை வெறிச்சு வெறிச்சு பாத்த தயாரிப்பாளர்கள் பொறுமையை இழந்து, தற்போது வரிசையாக OTT தளத்தில் படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.

இந்த வரிசையில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படமும் OOT தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகப்போகும் என்ற அதிர்ச்சியான செய்தி ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது விஜய்சேதுபதி படமும் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ.ரணசிங்கம் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாகவுள்ளது. Zee 5 நிறுவனம் இதன் உரிமையை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதியன்று, இத்திரைப்படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாகவுள்ளது .

சூரரைப்போற்று மற்றும் க/பெ ரணசிங்கம் என்ற இரண்டு முன்னணி கதாநாயகர்களின் படம் விரைவில் வெளியாகப் போவதால், யாருடைய படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கப் போகுதுன்னு ரசிகர்கள் இப்பவே அடிச்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

Continue Reading
To Top