Tamil Cinema News | சினிமா செய்திகள்
சொன்னதை செய்த சூர்யா.. மொத்தத்தையும் மூடிக் கொண்டு அமைதியாக இருக்கும் தியேட்டர் ஓனர்கள்
சூர்யாவின் சூரரைப்போற்று படம் அமேசான் தளத்தில் வெளியாவதைத் தொடர்ந்து தியேட்டர் ஓனர்கள் சூர்யாவை கண்டபடி வசை பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சூர்யா ஏன் சூரரைப்போற்று படத்தை அமேசான் தளத்திற்கு கொடுத்தேன் என்பது பற்றிய தெளிவான அறிக்கையை வெளியிட்டார். இருந்தாலும் தியேட்டர் ஓனர்கள் சூர்யா படத்தை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என கருத்து தெரிவித்தனர்.
ஆனால் அதெல்லாம் சும்மா. சூர்யாவின் படம் தியேட்டரில் வெளியானால் நல்ல வியாபாரம் ஆகும் என்பது அவர்களுக்கே தெரியும். அதுமட்டுமில்லாமல் பார்க்கிங், பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் என அனைத்தும் தாறுமாறான விலை வைத்து விற்கலாம் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்நிலையில் சூர்யா சூரரைப்போற்று படத்தில் வந்த லாபத்தில் சுமார் 5 கோடி ரூபாய் நன்கொடையாக ஒருசில சங்கங்களுக்கு வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.
அதில் முதல்கட்டமாக ரூ 1.5 கோடி மதிப்பிலான காசோலையை தயாரிப்பாளர் சங்க நலனுக்காக கலைப்புலி தாணுவிடம் சூர்யாவின் தந்தையும் முன்னாள் நடிகருமான சிவகுமார், சூர்யாவின் மேனேஜர் ராஜசேகர பாண்டியன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் ஒப்படைத்தனர்.

sivakumar-suriya-donated
இதேபோல் தியேட்டர் உரிமையாளர் சங்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கப் போவதாகத் தெரிகிறது. இஷ்டத்துக்கு சூர்யாவை பேசிவந்த தியேட்டர் ஓனர்கள் சூர்யா சொன்னதை செய்ததால் தற்போது அமைதியாக இருக்கின்றனர்.
சூர்யா அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
