Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-sk-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் லிஸ்டில் சேர்க்கப்பட்ட சூர்யா.. இனி அவரு முன்னணி நடிகர் இல்லை என்பதற்கான ஆதாரம் உள்ளே!

விஜய், அஜித்துக்கு அடுத்தது சூர்யாதான் என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் தற்போது சூர்யா இரண்டாவது கட்ட நடிகராக தள்ளப்பட்டுள்ளது சூர்யா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்சினிமாவில் வருடத்திற்கு ஒரு முறை மார்க்கெட் ரீதியாக எந்தெந்த நடிகர்கள் எந்த வரிசையில் இருக்கிறார்கள் என்பதை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒன்று சேர்ந்து ஒரு லிஸ்டை வெளியிடுவார்கள்.

அந்த லிஸ்ட் தற்போது வெளியானதிலிருந்து சூர்யா ரசிகர்கள் மத்தியில் கோபத்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சூர்யா இரண்டாவது கட்ட நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டது தான்.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களின் படங்களின் வசூலை பொருத்து இந்த லிஸ்ட் அமையும். அந்த வகையில் முதல்கட்ட நடிகர்களாக விஜய், அஜித், ரஜினி போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 2வது கட்ட நடிகர்களாக சூர்யா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி போன்றோர் அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் போன்றோர் முன்னேற்றம் கண்டிருந்தாலும் சூர்யா ரசிகர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் இதுவரை பெரிய அளவு படங்கள் வெளிவராததால் 2019 வரை கணக்கெடுக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த சூர்யாவுக்கே இந்த நிலைமையா என்கிறது கோலிவுட் வட்டாரம். ஒருவேளை சூரரைப் போற்று படத்தை தியேட்டர்களில் வெளியிட வில்லை என்பதற்காக தியேட்டர்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே சூர்யாவின் மார்க்கெட்டை இறக்க பார்க்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

tamil-actors-position

tamil-actors-position

Continue Reading
To Top