புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

டேய் நா நேத்து வந்தவன் டா.. சிவகார்த்திகேயனை இந்த விஷயத்தில் மிஞ்ச முடியாமல் தவிக்கும் சூர்யா

Sivakarthikeyan: நடிகர் சூர்யா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த படம் தான் கங்குவா. ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கவில்லை. எந்த பக்கம் திரும்பினாலும் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது.

படத்தின் முழுமையான விமர்சனம் மற்றும் கலெக்சன் பற்றி இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். ஏற்கனவே கங்குவா பட ரிலீஸ்க்கு முன்பு அமரன் படத்தை தியேட்டரில் இருந்து எடுக்க முடியாது என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் சூர்யா படத்தில் குறைந்த அளவில் தியேட்டர்கள் கிடைக்குமோ என்ற அச்சம் இருந்து வந்தது. போதாத குறைக்கு அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் அமரன் படத்தோடு நவம்பர் 14ஆம் தேதியில் ரிலீஸ் ஆன சூர்யாவின் கங்குவா படத்தை பல இடங்களில் ஒப்பிட்டு வருகிறார்கள்.

டேய் நா நேத்து வந்தவன் டா

இது கொஞ்சம் அபத்தம் தான் என்றாலும் இணையவாசிகள் அடிச்சதுடா லக்கு என பல வகையிலும் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி ஒரு மீம் தான் தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. அதாவது இன்று கங்குவா மற்றும் அமரன் படத்தில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஒப்பிட்டு இந்த மீம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கங்குவா படத்தின் ஆன்லைன் புக்கிங் ஒரு மணி நேரத்தில் 1.44k எனவும், அமரன் படத்தில் ஆன்லைன் புக்கிங் 1.42k எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் இதில் சிவகார்த்திகேயன் என்ன நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிக்கெட் புக்கிங்ல் இருக்கும், வாங்க ஒன்னா போலாம் என்று சொல்வது போலவும் உடனே சூர்யா டேய் நான் நேற்று வந்தவன்டா என சொல்வது போலவும் இந்த மீம் இருக்கிறது.

SK
SK
- Advertisement -

Trending News