Connect with us
Cinemapettai

Cinemapettai

bala-suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலா படத்தை வைத்து சூர்யா போட்ட மெகா பிளான்.. கண்டிப்பா நஷ்டத்துக்கு வாய்ப்பில்லை

கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் பாலா மற்றும் சூர்யா மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதைக் கேள்விப்பட்ட சூர்யா ரசிகர்கள் மனக்கோட்டை கட்ட ஆரம்பித்தனர்.

கண்டிப்பாக நந்தா மற்றும் பிதாமகன் போன்ற செம படம் ஒன்று காத்திருக்கிறது என கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால் சூர்யா மற்றும் பாலா இணையும் படத்தில் சூர்யா தயாரிப்பாளராக மட்டுமே பணியாற்றவுள்ளார்.

சூர்யா தயாரிக்கும் பாலா படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாலாவும் வெற்றிப்படம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம்.

ஆனால் சூர்யா மற்றும் பாலா இணையும் படம் கண்டிப்பாக தியேட்டரில் வெளியாகாது என சூர்யா வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சூர்யா ஏற்கனவே தான் தயாரித்த நான்கு படங்களையும் அமேசான் தளத்தில் கொடுத்துவிட்டார்.

அந்த வகையில் அடுத்ததாக தயாரிக்கும் பாலா படம் முழுக்க முழுக்க அமேசான் தளத்திற்காக உருவாக உள்ளதாம். இதற்காக சூர்யாவுக்கு மிகப்பெரிய தொகையை அமேசான் நிறுவனம் கொடுக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஏற்கனவே சூர்யா சூரரைப்போற்று படத்தை அமேசான் தளத்திற்கு கொடுத்துவிட்டதால் ஆத்திரத்தில் இருந்த தியேட்டர்காரர்களுக்கு மேலும் எரிச்சலூட்டும் வகையில் சூர்யா தன்னுடைய அடுத்தடுத்த படங்களையும் ஒடிடி தளத்திற்கு கொடுத்து வருகிறார். இந்த பிரச்சனை எங்கு போய் முடியுமோ என கவலையில் உள்ளது கோலிவுட்.

bala-suriya-cinemapettai

bala-suriya-cinemapettai

Continue Reading
To Top