fbpx
Connect with us

Cinemapettai

விக்ரம் சூர்யாவுக்கு எல்லாம் இதுதான் கடைசி வெற்றிப்படம்.. நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்

vikram-suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரம் சூர்யாவுக்கு எல்லாம் இதுதான் கடைசி வெற்றிப்படம்.. நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்

சினிமாவை பொறுத்தவரை வெற்றி கொடுப்பவர்களை மட்டுமே தோளில் தட்டிக்கொடுத்து உயர்த்தும். சிறிது தடுமாறினாலும் மொத்தமாகச் அழித்துவிடும் என்பது பலரது வாழ்க்கையில் நடைபெறுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு காலத்தில் தொடர் வெற்றிகளால் குவிந்து கிடந்த நாயகர்கள் சமீபகாலமாக ஒரு சாதாரண ஹிட் கொடுக்கவே தடுமாறி வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் விக்ரம் இருவருக்குமே தற்போது சோதனைக் காலம் தான்.

விக்ரம் நடித்த ஐ படம் பெரிய வெற்றி என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. விக்ரம் நடிப்பில் கடைசியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் என்றால் அது அந்நியன் தான்.

அதேபோல் சூர்யாவுக்கு கடைசியாக மிகப்பெரிய வெற்றி என்றால் ஹரி இயக்கத்தில் வெளிவந்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் தான். அதன்பிறகு வந்த அனைத்து படங்களுமே இருவருக்கும் வசூல் ரீதியாக பெரிய அடி தான்.

அதுமட்டுமல்லாமல் ஆரியா வசூல் ரீதியாக வெற்றியை கொடுத்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன், ஜீவாவுக்கு கோ தான் வெற்றிப் படமே. அவ்வளவு ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றால் அது எந்திரன் படத்திற்கு பிறகு பேட்ட வரையில் முழுமையான வெற்றி.

விஜய்-அஜித் இருவரும் ஒரு தோல்வி கொடுத்தால் உடனடியாக அடுத்த படத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்து தங்களது ஸ்டார் அந்தஸ்தை மெயின்டன் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரின் படம் நன்றாகவே இல்லை என்றாலும் வசூல் ரீதியாக எந்த குறைவும் இருக்காது என்பது தற்போதைய விநியோகஸ்தர்களின் ரிப்போர்ட்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top