Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசந்தபாலனை நம்ப வைத்து ஏமாற்றிய சூர்யா, விக்ரம்.. நெனச்சு நெனச்சு வருத்தப்படும் வசந்த்!
தமிழ் சினிமாவில் எதார்த்த சினிமாவின் மூலம் ஈடு இணை இல்லாத இயக்குனராக மாறியவர் வசந்தபாலன். இவரது ஒவ்வொரு படங்களும் ஒரு காவியம் என்பதைப் போல பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார்.
ஆல்பம் என்ற தோல்வி படத்தை தொடர்ந்து வெயில் என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அதன்பிறகு அங்காடித்தெரு படத்தின் மூலம் எதார்த்த கதையிலும் மிகப்பெரிய வசூலை குவிக்க முடியும் என நிரூபித்தவர்.
ஆனால் அரவான் மற்றும் காவிய தலைவன் போன்ற படங்கள் விமர்சகர் ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. தற்போது ஜெயில் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்.
அங்காடித்தெரு படத்திற்கு பிறகு ஒருவேளை சூர்யா மற்றும் விக்ரம் இருவரில் யாரேனும் ஒருவரை வைத்து படம் இயக்கி இருந்தால் வசந்தபாலன் தற்போது ஸ்டார் இயக்குனர் ஆக மாறி இருப்பார்.
சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய இருவருக்கும் தனித்தனியே ஒரு கதையை சொல்லி ஓகே செய்து வைத்திருந்தாராம் வசந்தபாலன். கடைசி வரைக்கும் செய்யலாம் என நம்பிக்கை கொடுத்து இருவரும் மாஸ் படங்கள் வந்தவுடன் வசந்த பாலனை கழட்டி விட்டு விட்டார்களாம்.
சினிமாவில் வசந்தபாலன் பெரிய இயக்குனராக மாறுவதற்கு முன்னணி நடிகர்கள் கைகொடுத்து தூக்கிவிடாததே காரணம் எனவும் கருத்துக்கள் வெளிவருகின்றன. சூர்யா மற்றும் விக்ரம் பட வாய்ப்பு கைநழுவியதை டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலில் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
