fbpx
Connect with us

Cinemapettai

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இந்த நடிகையுமா.!சொல்லவே இல்ல.! குஷியில் ரசிகர்கள்.!

News | செய்திகள்

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இந்த நடிகையுமா.!சொல்லவே இல்ல.! குஷியில் ரசிகர்கள்.!

தானா சேர்ந்த கூட்டம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டைமன்மேன்ட் நிறுவனம் இணைந்து தாயரிக்கின்றது.

thaana serntha koottam

thaana-serntha-koottam suriya

இப்படத்தில் ஆர் ஜெ பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்தது.

அனிருத் இசையில் ஏற்கெனவே இந்தப் படத்தின் முதல் பாடலான ‘நானா தானா’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற பாடல்களும் இதே வகையில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் இரண்டாவது பாடலின் டீஸரை வெளியிட்டர்.

surya

‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற இந்தப் பாடலை ஆண்டனி தாசன் பாடியிருக்கிறார், மணி அமுதவன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளனர்.இந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், கார்த்திக், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆனால் இதில் நடிகை மீரா மிதுன் முக்கிய ரோலில் நடித்திருப்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

surya thana sernthu kootam

’8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்த மீரா மிதுன் நடித்த காட்சிகள் சஸ்பென்ஸாக இருந்தது. சமீபத்தில், மீரா மிதுன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் தான் நடித்ததை உறுதிபடுத்தியிருக்கிறார்.

தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் அவர் தான் நடிப்பது பற்றிய விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்துவிட்டாராம். இவரது கதாபாத்திரம் இப்படத்தின் ரகசியம் போல் தெரிகிறது. பொங்கல் வரை பொறுத்திருப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top