Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்ரா சக்க.. சூர்யா – ஹரி படத்தில் இணைந்த விஜய் பட ஹீரோயின்.. அடி தூள் அப்டேட்
தற்பொழுது தமிழ் சினிமா உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சூர்யாவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்புதான். சூரரைப்போற்று படத்திற்கு பிறகு தற்போது வரை சூர்யா தனது அடுத்த படத்தை பற்றிய தகவல்களை தெரிவிக்கவில்லை. இதனாலேயே அவரது ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்தனர்.
இந்நிலையில் சூர்யா மற்றும் ஹரி ஆகிய இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான். இதனை சூர்யாவின் தம்பி கார்த்தி கூட சமீபத்தில் உறுதி செய்திருந்தார்.
சூர்யாவுடன் முதன் முறையாக மாளவிகா மோகனன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மாளவிகா மோகனன் தற்போது தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார். முன்னதாக ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடுவதால் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.
கண்டிப்பா சூர்யா ஹரி கூட்டணி பிளாக்பஸ்டர் தான். சூர்யா மற்றும் ஹரி ஆகிய இருவருமே சமீபத்திய படங்களால் அடிபட்ட சிங்கங்களாக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
விரைவில் தெறிக்கவிட்ட போகின்றனர் என்பது மட்டும் உறுதி.

malavika-mohanan
