Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆக்ரோஷமாக களமிறங்கும் சூர்யா ஹரி.. தீபாவளிக்கு சிக்குறவங்கயெல்லாம் சின்னாபின்னம் தான் போல
எப்படா சூர்யாவின் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பு வரும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு எதிர்பாராவிதமாக நேற்று மாலை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சூர்யா மற்றும் ஹரி ஆகிய இருவரின் புதிய படம் பற்றிய தகவலை வெளியிட்டது.
சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா ஹரி படத்தில் தான் நடிக்க போகிறார் என்பது ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அது எப்போது என்ற செய்தி ரசிகர்களுக்கு தெரியாமலேயே இருந்தது. மேலும் சூரரைப்போற்று படத்தின் வெளியீட்டு தேதியில் குழப்பம் நிலவி வருவதால் அதை தற்காலிகமாக கூறாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சூர்யா மற்றும் ஹரி ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் படம் ஒரே கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முழுவதும் முடிவடைய இருக்கிறதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஆக்ரோஷமாக அருவா என பெயர் வைத்துள்ளனர்.
முழுக்க முழுக்க காமெடி குடும்ப ஆக்ஷன் கலந்த திரைப்படமாக அருவா படம் உருவாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா மாஸ் படத்தில் நடிக்க இருப்பதால் அவரது ரசிகர்கள் நேற்று அருவா பட அறிவிப்பை இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கினர். மேலும் இமான் சூர்யாவுக்கு முதல் முறையாக இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

aruvaa
இந்த படத்தை 2020 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதே ஆண்டு தீபாவளி தல அஜித் நடிக்கும் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
