Connect with us

Cinemapettai

நானும் சூர்யாவும் இணையும் படத்தின் கதை இதுதான்.. வெளிப்படையாக கூறி கெத்து காட்டும் கௌதம் மேனன்

gautham-suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நானும் சூர்யாவும் இணையும் படத்தின் கதை இதுதான்.. வெளிப்படையாக கூறி கெத்து காட்டும் கௌதம் மேனன்

சில வருடங்கள் கௌதம் மேனனின் படங்கள் வெளிவராமல் இருந்தாலும் அவ்வளவு எளிதில் அவரை தமிழ்சினிமா மறந்து விட முடியாது. ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் ட்ரெண்டை மாற்றியவர் இவர் தான்.

மேலும் சூர்யா நட்சத்திர நாயகனாக மாறியதற்கு இவரும் ஒரு அடிப்படை காரணம் என்று சொல்லலாம். இன்றளவும் சூர்யாவின் காக்க காக்க திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது. வாரணம் ஆயிரம் திரைப்படத்தை காதலுக்கே உரிய காவியமாக சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் துருவ நட்சத்திரம் படத்தின் போது ஏற்பட்ட சிறிய மனக்கசப்பு காரணமாக இருவரும் இணையாமல் இருந்தனர். ஆனாலும் அவரது ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் இணையவேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. அந்தக் கனவு தற்போது நனவாகி இருக்கிறது.

சூர்யா-கௌதம் மேனன் இணையும் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் கதை, கமல் – காதம்பரி என்ற இருவருடைய கதை தான் படத்தின் கதை. இரண்டு கதாபாத்திரங்களும் கதைப்படி இசையமைப்பாளர்கள், பாடகர்கள். லண்டனில் இசை நிகழ்ச்சியில் சந்தித்து இணைகிறார்கள். பாடல்கள், இளையராஜாவின் இசை என படத்தின் கதை பயணிக்கும்.

சூர்யாவால் மட்டுமே இந்த படத்தை திறம்பட கொண்டுவர முடியுமென அவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். கமலாக சூர்யாவும், காதம்பரியாக ஜோதிகாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.

சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top