fbpx
Connect with us

Cinemapettai

சூர்யாவை காக்க வரும் காக்க காக்க இயக்குனர்.. ஒரு வழியாக சண்டை முடிந்ததுபா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவை காக்க வரும் காக்க காக்க இயக்குனர்.. ஒரு வழியாக சண்டை முடிந்ததுபா!

தமிழ் சினிமாவின் தங்க மகன் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் நடிகர் சூர்யா. நடிப்பையும் தாண்டி ஏழை எளிய மக்களின் பிள்ளைகளை படிக்க வைப்பதில் பெருமக்களை சம்பாதித்தவர்.

ஒரு காலத்தில் விஜய், அஜித் ஆகியோர் ஹிட்டடிக்க தடுமாறிக் கொண்டிருந்தபோது, தொடர்ந்து வரிசையாக பலவெற்றிப் படங்களை கொடுத்தவர். ஆனால் தற்போது ஒரு ஹிட் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். காரணம் இவருடைய மார்க்கெட்டை தற்போது சிவகார்த்திகேயன் சிதைத்துவிட்டார் என்று ஒரு பக்கம் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக சண்டையிலிருந்து சூர்யா மற்றும் கவுதம் மேனன் தற்போது மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சூர்யாவை தமிழ் சினிமாவில் நல்லதொரு நாயகனாக அடையாளப்படுத்தியதில் கௌதம் மேனனுக்கு பெரும் பங்கு உண்டு.

இந்நிலையில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சூர்யா, ஹரி இயக்கத்தில் நடித்து முடித்த பிறகு அந்த படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லகாலம் பொறந்திருச்சு டோய்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top