Tamil Cinema News | சினிமா செய்திகள்
கதை ரெடி.. அடுத்த வாரம் சொல்ல போறேன்.. சூர்யாவுக்கு கொக்கி போடும் இயக்குனர்
தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணியாக வலம் வந்தவர்கள் நிறைய பேர் உண்டு. அதில் முக்கியமானதாக கருதப்படுபவர்கள் சூர்யா மற்றும் கௌதம் மேனன். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி துருவ நட்சத்திரம் படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் சூர்யாவிடம் கதையை முழுமையாக சொல்லாமல் கௌதம் மேனன் இழுத்தடித்ததால் மேலும் சில பிரச்சனைகளாலும் இருவரின் கூட்டணியும் பிரிந்து சென்றது. அதன்பிறகு சூர்யாவுக்கு பெரிய அளவில் இயக்குனர்கள் அமையாததால் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.
தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று படம் சூர்யாவின் மனதுக்கு நெருக்கமானதாகவும் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் எனவும் உறுதியாக உள்ளார். இந்நிலையில் மீண்டும் கௌதம் மேனன் சூர்யாவிடம் கதை சொல்லப் போவதாக கூறிய செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாஸ் ஹீரோவாக வலம் வரும் சூர்யாவுக்கு கமல் மற்றும் காதம்பரி என்ற இரண்டு இசை கலைஞர்களின் காதல் கதையை மையமாக வைத்து ஒரு கதையை எழுதி வைத்துள்ளதாகவும் இன்னும் 10 நாட்களில் சூர்யாவை சந்தித்து கதை சொல்ல இருப்பதாகவும் கௌதம் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த கூட்டணியை மட்டும் இணைந்தால் கண்டிப்பாக சூர்யா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.
