Suriya-Kadugu DVD

படங்களில் போலீஸ் வேடம் என்றாலே முதலில் ரசிகர்கள் மனதில் வருவது சூர்யா நடித்த துரைசிங்கம் கதாபாத்திரம் தான். அப்படி ஒரு நடிகர் நிஜ வாழ்க்கையிலேயே போலீஸ் போல களமிறங்கினால் என்னவாகும்.

சூர்யாவின் 2D நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கடுகு படத்தின் திருட்டு DVDகள் சென்னையில் JJ நகர் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் அறிந்து சூர்யா நேரில் சென்றுள்ளார்.

சூர்யாவை பார்த்ததும் கடைக்காரர் ஓடிவிட்டார். இதுபற்றி போலீஸ் நிலையத்தில் சூர்யா தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.