Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் படத்தில் இணைந்த பிரபல நடிகை.. ட்விட்டரில் டிரண்டாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி தனது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களை தயாரித்து வழங்கியும் வருகிறார்.

அந்தவகையில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் மற்றும் உடன்பிறப்பே, ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஓ மை டாக் ஆகிய படங்களை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படங்கள் மாதம் ஒன்று என்ற கணக்கில் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக உள்ளது.

இது தவிர தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் சூர்யா நடித்து வருகிறார். இதில் ஜெய் பீம் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகை ராதிகா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா உடன் அமர்ந்து காபி பருகும் புகைப்படம் ஒன்றை நடிகை ராதிகா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

suriya-radhika

suriya-radhika

ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதிகா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் ராதிகா இன்று திரையுலகில் நுழைந்து 43 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் சூர்யா படத்தில் இணைந்துள்ளது சந்தோஷம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top