Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா சன் பிக்சர்ஸில் நடிக்க காரணம் இதுதான்! விருப்பப்பட்டு இல்லையாம்
வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது மாஸ் மகாராஜாவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் சூர்யா.
என்னதான் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்தாலும் இன்னும் அவரது ரசிகர் கூட்டம் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.
ஆனால் அதை கொண்டாட வைக்கும் விதமாக சூர்யாவின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷி ஆகி விட்டது.
சூர்யா தனது நாற்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். ஆனால் இதில் சூர்யாவின் விருப்பம் குறைவு தானாம்.
அதற்கு காரணம் முதலில் சூரரைப்போற்று தியேட்டர் ரிலீஸ் என்பதால் மிகுந்த விலை கொடுத்து வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பின்னர் அமேசன் தளத்திற்கு சென்றால் சூரரைப்போற்று படத்தின் விலையை குறைத்ததாக தெரிகிறது.
ஆகையால் சூர்யா விலையை குறைக்க வேண்டாம் எனவும் உங்கள் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறேன் எனவும் கூறி விட்டதாக தெரிகிறது.
இதுதான் காரணம் என தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

suriya-cinemapettai
