fbpx
Connect with us

Cinemapettai

சூர்யாவுடன் சேர்த்து 10 ஹீரோக்கள் ஒதுக்கிய கதை.. மீண்டும் சூர்யாவே நடித்து சூப்பர் ஹிட்டான படம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவுடன் சேர்த்து 10 ஹீரோக்கள் ஒதுக்கிய கதை.. மீண்டும் சூர்யாவே நடித்து சூப்பர் ஹிட்டான படம்!

சினிமாவைப் பொருத்தவரை ஒரு சில படங்கள் இவர் நடித்தால் தான் ஹிட்டாகும் என எழுதி இருந்தால் அது எங்கு சுற்றினாலும் இறுதியில் அவர்கள் கைக்கு தான் வந்து சேரும்.

அப்படி சூர்யா உட்பட கிட்டத்தட்ட 10 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் மீண்டும் சூர்யாவே நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டு இருப்பவர் சூர்யா. ஆனால் அஞ்சான் படத்தின் தோல்விக்கு பிறகு சூர்யா நடிக்கும் அனைத்து படங்களும் தொடர் தோல்விகளை பெற்று வருகின்றன.

அடுத்ததாக சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூரரை போற்று படம் மிகப்பெரிய வெற்றியை குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அந்த படத்தை அமேசான் தளத்திற்கு கொடுத்து விட்டார் சூர்யா.

ஆனால் 2013 வரை சூர்யாவுக்கு தமிழ் சினிமாவின் பொன்னான ஆண்டுகள் என்றே சொல்லலாம். அப்படி சூர்யாவின் வெற்றி படங்களில் முக்கியமான திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் படம் தான்.

சூர்யா ஜோதிகா நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தைதான் சூர்யா முதலில் நிராகரித்தாராம். அவர் மட்டும் இல்லாமல் ஏகப்பட்ட ஹீரோக்கள் அந்தக் கதையை நிராகரித்துள்ளனர்.

இறுதியில் ஜோதிகா சிபாரிசில் மீண்டும் சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கிய கிருஷ்ணா அதன்பிறகு தமிழில் நெடுஞ்சாலை என்று சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top