புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

முடியாதுன்னு விரட்டி விட்ட அதர்வா.. ஆரம்பத்திலேயே சூர்யா 44க்கு வந்த சிக்கல்

சூர்யா தனது சினிமா கேரியரில் மொத்தம் 43 படங்கள் நடித்துள்ளார். இதில் 43 வது படம் கங்குவா அவருக்கு சிறப்பாக அமையவில்லை. கொஞ்ச நாட்களாக சினிமா கேரியர் அவருக்கு டல் அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தியேட்டரில் அவருக்கு வெற்றி படங்கள் அமையவில்லை.

சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் இந்த இரண்டு படங்கள்தான் அவருக்கு சமீப காலத்தில் ஹிட்டாக அமைந்துள்ளது. சிங்கம் 2 படத்திற்கு பின்னர் இதுவரை அவருக்கு தியேட்டரில் ஓடிய எந்த படங்களும் சோதிக்கவில்லை. இப்படி சூர்யாவின் சினிமா கேரியர் மோசமான நிலையில் உள்ளது.

சமீபத்தில் அவர் கமிட்டான படங்கள் எல்லாம் அவருக்கு கைகூடி வரவில்லை. ஹிந்தியில் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் “கருணா” என்ற ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து டாப்பானது. அதற்கு முன் பாலாவின் வணங்கான் படத்தில் கொஞ்ச நாட்கள் நடித்தார் பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.

சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் கமிட்டான புறநானூறு படமும் அவர் நினைத்தவாறு அமையாததால் அதில் நடிக்க மறுத்துவிட்டார். இப்படி அவருக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதாவது தடை கற்கள் வந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது கார்த்திக் சுப்புராஜ் உடன் அடுத்த படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

இந்த படத்தை சூர்யா 44 என கூறிவந்த நிலையில் இதற்கு டைட்டில் “கோல்ட்” என தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் அந்த டைட்டிலை பதிவு செய்யும் பொழுது அது நடிகர் அதர்வாவிடம் இருந்துள்ளது. இதனால் அதர்வாவை சந்தித்து அந்த டைட்டிலை வாங்க முற்பட்டனர். ஆனால் அதர்வா ஒரு படத்தை இயக்கப் போகிறார். அந்த படத்திற்கு இந்த டைட்டில் தான் பொருந்தும் என மறுத்துவிட்டாராம்.

- Advertisement -

Trending News