Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிக்ஸ்பேக் நடிகையுடன் ஜோடி சேரும் சூர்யா.. மிரர் செல்ஃபியால் மிரண்டுபோன இணையதளம்
விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வர இருக்கிறது.
சூர்யாவின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படம் 3டி முறையில் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். கிட்டத்தட்ட பத்து மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் ஹீரோயின் திஷா பதானி நடிக்கிறார்.
மேலும் கோவை சரளா, ஆனந்தராஜ், யோகி பாபு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். சரித்திர பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பலரையும் மிரள விட்டது.
Also read: வணங்கான் கைவிட்டாலும் சூர்யா அடுத்தடுத்து கமிட்டான 5 படங்கள்.. சமரசமாக முடிந்த அருவா மோதல்
அதைத்தொடர்ந்து இப்படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான ஆவலை அதிகரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சூர்யா இப்படத்தில் இதுவரை நடிக்காத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிலும் அவர் இப்படத்தில் ஐந்து கேரக்டர்களில் வித்தியாசமாக தோன்ற இருக்கிறாராம்.
அதனாலேயே இப்படத்தை சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் இவருடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் இப்போது வரை ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அதையே தூக்கி சாப்பிடும் வகையில் இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் இருக்குமாம். தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு பட குழு தயாராகி இருக்கிறது.
அந்த வகையில் தற்போது சூர்யா 42 டீம் சென்னையை முற்றுகையிட்டுள்ளது. இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஷூட்டிங்கில் சூர்யா மற்றும் திஷா பதானி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அதில் பங்கேற்பதற்காக தற்போது ஹீரோயின் அட்டகாசமாக சென்னைக்கு வந்து இறங்கியுள்ளார். மிகக் குறுகிய நாட்கள் மட்டுமே சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது.
சிக்ஸ் பேக்குடன் செல்பி

disha-pathani-actress
அதைத்தொடர்ந்து சிறு இடைவேளைக்குப் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் வரை தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறதாம். இப்படி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வர இருக்கிறது. இதை அடுத்து வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க இருக்கும் சூர்யா விரைவில் இந்த படத்தை முடித்து விட வேண்டும் என ஆர்வத்துடன் நடிக்க வருகிறாராம்.
Also read: பாலா வேண்டாம் அவரை கூப்பிடுங்க என தஞ்சமடைந்த சூர்யா.. யாரும் எதிர்பார்க்காத அடுத்த கூட்டணி
