ஹாலிவுட் தரத்தில் உருவாகும் சூர்யா 42.. மிரளவிட்ட மோஷன் போஸ்டர்

சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்த வருகிறார். இது தவிர வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உள்ளது.

இந்நிலையில் சூர்யாவின் 42 வது படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அதாவது சிறுத்தை சிவா உடன் முதல் முறையாக கூட்டணி அமைக்க உள்ளார் சூர்யா. இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படம் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக உள்ளது.

Also Read :அக்கட தேசத்திலும் ஹிட்டடித்த சூர்யாவின் நான்கு படங்கள்.. தரமாக உருவாகி வரும் 5வது படம்

இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. அதாவது முழுக்க முழுக்க இப்படம் 3டி அனிமேஷனில் உருவாக உள்ளது.

அதுமட்டுமின்றி இப்படம் பத்து மொழிகளில் வெளியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூர்யா 42 படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு இப்படத்தில் காட்சிகள் இடம்பெறும் என்பது மோஷன் போஸ்டரிலேயே தெரிய வந்துள்ளது.

Also Read :அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த சூர்யா.. மாறா ஜெயிச்சுரு அவ்வளவுதான்

ஒரு கழுகு சுற்றித்திரிந்து சூர்யாவின் மீது அமர்வது போன்ற போஸ்டர் வெளியாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்றது. அதுமட்டுமின்றி முழுக்க முழுக்க சென்டிமென்ட் படங்களாக எடுத்து வரும் சிறுத்தை சிவா முதல் முறையாக வித்தியாசமாக யோசித்து உள்ளார்.

மேலும் சூர்யா, சிறுத்தை சிவா இருவருக்குமே இப்படம் மிக முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளது. இப்போது இந்த மோஷன் போஸ்டர் வீடியோ சூர்யா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read :யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்.. வணங்கான், வாடிவாசல் படத்தில் சூர்யா செய்யப் போகும் சம்பவம்