சூர்யா நடிக்கும் “சூரரைப் போற்று” படத்தில் மாரி 2 கனெக்ஷன்.! துள்ளி குதிக்கும் சூர்யா ரசிகர்கள்

suriya 38 : நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இருந்து திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, இதனைத் தொடர்ந்து கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான்  திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூரரைப் போற்று என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார்,
மேலும் படத்தில் அபர்ணா பாலமுரளி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் இந்த பதிவை பார்த்த சூர்யா ரசிகர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள்.

மாரி 2 படத்தில் மிகப்பெரிய ஹிட் அடைந்த  பாடல் என்றால் அது ரவுடி பேபி பாடல் தான் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது இந்த பாடலை பாடிய தீ என்ற பாடகி சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தில் பாடலை பாட இருக்கிறார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

Leave a Comment