Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாவ் பிரபல பெண் இயக்குனருடன் இணையம் சூர்யா.. யாருன்னு தெரிந்தாள் ஷாக் ஆய்டுவீங்க..
பெண் இயக்குனருடன் களமிறங்கும் சூர்யா-38 ..!
மெகா ஹிட் இயக்குனருடன் தனது அடுத்த படத்தை தொடங்க இருப்பதாக சூர்யாவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சூர்யா நடித்து வெளிவர இருக்கும் என்.ஜி.கே படத்தின் டீசர் வரும் காதலர் தினத்தன்று வெளிவர உள்ளது என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார், ரசிகர்கள் எதிர்பார்ப்பு பெருமளவில் இருக்கிறது. பொங்கலுக்கு வெளிவர இருக்கும் என்று எதிர்பார்த்ததை நடக்கவில்லை.
இறுதிச்சுற்று மக்கள் மனதில் இடம் பெற்றது மட்டுமல்லாமல் உலக அளவில் பல பரிசுகளை தட்டி தூக்கியது. இதனை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதன்மூலம் சூர்யா முதன் முறையாக ஒரு பெண் இயக்குனர் உடன் இணைந்து நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
