சூர்யா 38-பிரம்மாண்ட அறிவிப்புகளை வெளியிட்ட 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.! செம்ம மாஸ்

suriya 38 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா, தற்போது இவர் செல்வராகவன் இயக்கத்தில் NGK திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற மே மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது.

இதனை தொடர்ந்து தற்பொழுது கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா மற்றும் சாயிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சூர்யா 38 படத்தை பற்றி அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது சூர்யா  38 படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்குவதாகவும் ஜீவி பிரகாஷ் இசை அமைப்பாளராகவும் இதற்கு முன் தகவல் வெளியானது ஆனால் தற்போது அந்த தகவலை உறுதி செய்யும் விதமாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Comment