Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெளியானது சூர்யா – ஆர்யா – மோகன்லால் – கே வி ஆனந்த் இணையும் பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்.

சூர்யா 37

முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 என பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகின்றார்.

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது . இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்யா, மோகன்லால், பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கே.வி ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கிறிஸ்துமஸ் சமயத்தில் “காப்பான், மீட்பான், உயிர்கா” என மூன்று டைட்டில்களை வைத்து ரசிகர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தினார்.

இதனை பார்த்த பல ரசிகர்களும் “உயிர்கா” என்ற பெயரே அதிகமாக கவர்கிறது என்றும், வித்தியாசமாக இருக்கிறது எனவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சூர்யா 37 படத்தில் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி 1 காலை 12.10 மணிக்கு வெளியாகும் என கே.வி. ஆனந்த் அறிவித்தார். ரசிகர்கள் தேர்தெடுத்ததா அல்லது சரியான தலைப்பா என்று ட்விஸ்ட் வைத்தார் இயக்குனர்.

காப்பான்

suriya 37 kaappaan

தலைப்பு காப்பான் எனவும், இரண்டு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர் படக்குழு.

suriya 37 kaappaan

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யா, என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோவாக நடிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top